கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்
கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.
கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.
அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்திலும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் வந்திருந்ததாகவும், இவர் இரகசியமாக வேட்புமனுவில் கையெழுத்திட வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.