யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகிறது கடவுச்சீட்டு விநியோக பணியகம்
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கத்தின் புதிய பணியகம் வரும் செப்ரெம்பர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கத்தின் புதிய பணியகம் வரும் செப்ரெம்பர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வந்த இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர், கியூ பிரிவு காவல்துறையினரால் சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நிகழ்ந்த பாரிய நில நடுக்கத்தினால், 1500 பேருக்கு மேலானோர் பலியான நேபாளத்துக்கு, சிறிலங்கா இன்று அதிகாலையில் 159 பேர் கொண்ட மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது.
ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்ச சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னான் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முடக்கியுள்ளனர்.