யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகிறது கடவுச்சீட்டு விநியோக பணியகம்
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கத்தின் புதிய பணியகம் வரும் செப்ரெம்பர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் கடவுச்சீட்டு சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு இந்தப் பணியகம் உதவியாக அமையும் என்று, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வவுனியா, மாத்தறை மற்றும் குருநாகலில் இதேபோன்ற பிராந்திய பணியகங்கள் திறக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.
