மேலும்

தமிழ்நாடு மீனவர்களின் அத்துமீறல் – ஒளிப்பட ஆதாரங்களை இந்தியாவிடம் கொடுத்தது சிறிலங்கா

boatதமிழ்நாடு மீனவர்களின் படகுகள் சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது தொடர்பான, ஒளிப்பட ஆதாரங்களை கையளித்துள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சுக்கு சிறிலங்கா கடற்படை, கையளித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துமீறும் தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைக் கண்காணிப்பதற்கென பாக்கு நீரிணையில் உள்ள தீவுகள் பலவற்றில் சிறிலங்கா கடற்படை ரேடர்களை நிறுவியுள்ளது.

இவற்றின் மூலம், எடுக்கப்பட்ட அத்துமீறும் படகுகள் தொடர்பான ஒளிப்படங்களை, சிறிலங்கா கடற்படை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் கையளித்திருந்தது.

இந்த ஒளிப்படங்கள் மேலதிக நடவடிக்கைக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஒளிப்பட ஆதாரங்களின் அடிப்படையில் தான், கடந்த திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், இந்தியக் கடலோரக் காவல்படையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில்,2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலான, காலப்பகுதியில், 36,865 இந்திய மீன்பிடிப்படகுகள் பாக்கு நீரிணையில், எல்லை தாண்டிச் சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா கடற்படை கையளித்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே, இந்தியக் கடலோரக் காவல்படை மூத்த அதிகாரி, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா கடல் எல்லைக்குள் ஊடுருவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *