அவசரகாலச் சட்டம் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு
அவசரகாலச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவசரகாலச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் அவசரகால நிலையை நீடிப்புச் செய்வதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் எவரும் தமது பிராந்திய அல்லது தலைமை பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேவையின் அடிப்படையில், சிறிலங்கா இராணுவம் தற்போது மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.