19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

