மேலும்

Tag Archives: அமெரிக்கா

ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை

ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின்  தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள 185 எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, மன்னார் நீதிமன்ற நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி

உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது.

அலரி மாளிகை மாநாட்டில் இருந்து வெளியேறிய சிறிலங்கா அதிபர் – காரணம் என்ன?

அலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா போர்த் தளபாடங்களை சிறிலங்கா வாங்குவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை

ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் சிறிலங்காவின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் விவகாரம் – கொழும்பில் கூடும் இந்திய, அமெரிக்க சீன உயர் அதிகாரிகள்

கொழும்பில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் தொடர்பான கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடன்பொறியில் இருந்து சிறிலங்கா போன்ற நாடுகளை காப்பாற்ற அமெரிக்கா முன்வைக்கும் திட்டம்

அமெரிக்க அரசாங்கத்தின் பின்புலத்துடனான நிதி முதலீடுகளின் மூலம், சிறிலங்கா போன்ற நாடுகளை கடன் பொறியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலர் உதவியை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் மூலம், 480 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

நிலை மாறும் உலகில் சிறிலங்காவின் நகர்வு

புதியதோர் ஒழுங்கை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கில் அமெரிக்க ஏகபோக ஆதிக்கம் வலுவிழந்து போகிறது. அரசுகள் எல்லாவற்றிற்கும் தலைமை அரசாக தன்னை நிறுத்தும் முயற்சி சிறிது சிறிதாக அமெரிக்காவின் கையிலிருந்து கை நழுவிப்போகிறது.

ரஷ்யாவுக்கான தூதுவராகிறார் தயான் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய தூதுவர்கள்

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, கலாநிதி தயான் ஜயதிலக, தனது கடமையைப் பொறுப்பேற்பதற்காக, எதிர்வரும் 31ஆம் நாள் மொஸ்கோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.