நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்ற சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி
நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர். திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.




