மேலும்

Tag Archives: இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

வாகனங்களைப் பயன்படுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா- சீன கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு

சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

மைத்திரியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை

நான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் மிகமுக்கியமானது- பாகிஸ்தான் நாளிதழ்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு வந்தார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஐந்து நாள் பயணமாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரவேற்றார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி வரும் 5ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், வரும் 5ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.