மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் தப்பிய முன்னாள் காவல்துறை அதிகாரி தேடப்படுகிறார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை தேடி வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மன்னார் மருத்துவமனையில் இந்திய உதவியுடன் விபத்து சிகிச்சை பிரிவு

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும், இந்தியா முன்வந்தள்ளது.

வன்முறைகள் தலைவிரித்தாடும் நேபாளத்தில் இலங்கையர்கள் பத்திரம்

நேபாளத்தில் நிலவும் வன்முறைகளினால், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை

சிறிலங்கா அரசாங்கம் போர்க்கால மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணை மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருந்தாலும், எந்தவொரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை என அனைத்துலக ஊடகமான ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தரத்துடன் விசாரணைகள் நடக்க வேண்டும் – அனுசரணை நாடுகள்

மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவது முக்கியம் என்று சிறிலங்கா குறித்த அனுசரணை நாடுகளின் குழு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் குற்றவாளிகள் மீது அனைத்துலக தடைகளை விதிக்குமாறு கோரிக்கை

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, மேலும் தடைகளை விதிக்குமாறு ஐ.நா  மனித உரிமைகள் ஆணையாளர், வோல்கர் டர்க் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு வெளியகப் பொறிமுறைகளையும் ஏற்க முடியாது- சிறிலங்கா அறிவிப்பு

நாட்டில் பிளவுகளை உருவாக்கி, தேசிய நல்லிணக்க செயல்முறையை சிக்கலாக்கும்,  சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும்,  நிராகரிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிமலராஜன் படுகொலை விசாரணை தொடர்பான அறிக்கை வெளியீடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.