சீனாவின் உயர்மட்டக் குழு இன்று சிறிலங்கா வருகிறது
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் (Xizang) தன்னாட்சி பிராந்திய சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜுன்செங் (Wang Junzheng) தலைமையிலான குழுவே இன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்கிறது.
“சீன-சிறிலங்கா நட்பை மேம்படுத்துவதற்கும், பரஸ்பர புரிதலை ஆழப்படுத்துவதற்கும், நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், டிசம்பர் 23ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை சிறிலங்காவுக்கு வருகை தரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவை வாங் ஜுன்செங் வழிநடத்துவார் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
