மேலும்

திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இன்று மதியம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே எனக் கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *