மேலும்

அவசரகாலச் சட்ட நீடிப்பு – ஆராய்கிறது சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் போது, முன்னர் குறிப்பிட்ட அவதானிப்புகள் பின்பற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருவதாக சிறிலங்கா  மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

சிறிலங்கா  மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரான, நிமல் ஜி. புஞ்சிஹேவ இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தற்போது நீடிக்கப்பட்ட அவசர நிலைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

எங்கள் ஆய்வு முடிந்ததும், எங்கள் அவதானிப்புகள் இணங்கியிருந்தால், நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பேரிடரின் பின்னர் பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பாதுகாத்தல் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, 2025 நவம்பர் 28 ஆம் நாள், சிறப்பு அரசிதழ் மூலம் அவசரகால நிலையை முதலில் அறிவித்தார்.

இதுதொடர்பாக  முன்னர் சிறிலங்கா அதிபருக்கு  அனுப்பிய விரிவான கடிதத்தில், மனித உரிமைகள் ஆணைக்குழு அவசரநிலை விதிகள் குறித்த கவலைகளை எழுப்பியிருந்தது.

பல விதிகள் அரசியலமைப்பு விதிகள் மற்றும் அனைத்துலக மனிதஉரிமைக் கடப்பாடுகளுடன்  பொருந்தவில்லை என்றும் கூறியிருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *