மேலும்

உக்ரேன் ஆயுத விற்பனை விசாரணையில் மகிந்தவும் சிக்கலாம்

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் விசாரணைகளில் சிக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் – மைத்திரியிடம் வலியுறுத்திய சீனப் பிரதமர்

சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை, ஏற்படுத்துமாறும், அதனைத் தொடர்ச்சியாகப் பேணும் உறுதியான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்குமாறும்,  சிறிலங்கா அதிபரிடம், சீனப் பிரதமர் லி கெகியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

துறைமுக நகரத் திட்டம்: சீனாவுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை – சிறிலங்கா

சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று, சீன அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, சீன அமைச்சரை மேற்கொள்காட்டி வெளியான செய்திகளை சிறிலங்கா நிராகரித்துள்ளது.

மகிந்தவை நாங்கள் தோற்கடிக்கவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறது பிரித்தானியா

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக, பிரித்தானிய, அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றியதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் நிராகரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ரணில் பங்கேற்ற நிகழ்வுகளை வடக்கு மாகாணசபை புறக்கணிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.

‘மோடியின் அறிவுரையும், யாழ்ப்பாண மக்களின் யதார்த்தமும்’ – இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

சீன நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்- மைத்திரியிடம் வலியுறுத்தினார் சீன அதிபர்

சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்களின் சட்டரீதியான நலன்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக, சீனாவின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியப் போர்க்கப்பல்கள் திருக்கோணமலைக்கு வருகின்றன

மூன்று நாள் பயணமாக இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படையணியைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்

கோடரியால் தலையில் வெட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில், பொலன்னறுவவில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டுகிறார் சிறிலங்கா பிரதமர் ரணில்

வடக்கு மாகாண நிலவரங்களை நேரில் மதிப்பீடு செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தொடக்கம், மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். யாழ். நாகவிகாரையில் வழிபாட்டுடன், அவரது வடக்கிற்கான பயணம் ஆரம்பமாகவுள்ளது.