லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி
லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் தெரிவித்ததாக, குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச,அழைப்பு விடுத்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் (National People’s Movement (NPM) சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1999 இல் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு சபையை நிறுவுவதற்கும், புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய பாதுகாப்பு சபை செயலகத்தை அமைப்பதற்குமான, சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த ஐதேக முடிவெடுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி முடிவு செய்துள்ளது.
ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமது தரப்புக்கு சவாலாக இருக்கமாட்டார் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக, சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சற்று முன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.