மைத்திரியுடன் இணைந்தது ரிசாத் பதியுதீன் கட்சி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும் என்று கூறப்படும், ‘வஜ்ரா’ என்ற தங்க நிறமுள்ள மாந்திரீகப் பொருள் ஒன்றை தனது கைக்குள் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றும் அனைத்துலக சூழ்ச்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பும் தொடர்புபட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதில்லை என்றும், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கோருவதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், குத்துக்கரணம் அடித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின், தேர்தல் அறிக்கை வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.