மேலும்

மகிந்தவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இழுபறி – நாளைய நிகழ்வு ஒத்திவைப்பு

President-Mahida-Rajapaksaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின், தேர்தல் அறிக்கை வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை ‘மகிந்த சிந்தனை முக்கால நோக்கு’ என்ற தலைப்பில் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை காலை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது இது வரும் 25ம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அச்சிடுதலில் ஏற்பட்ட தாமதங்களினால் தான், நிகழ்வு பிற்போடப்பட்டதாக சிறிலங்கா அரசின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன கடந்த 19ம் நாள் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியீடு இழுபறிக்குள்ளாகியுள்ளது.

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மகிந்த ராஜபக்ச பல மாதங்களுக்கு முன்பிருந்தே மேற்கொண்டு வந்த போதிலும், தனது தேர்தல் அறிக்கையை தேர்தல் நாளில் இருந்து 12 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடும் நிலையில் உள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையை தோற்கடிக்கும் வகையில் சில உள்ளீடுகளை சேர்த்துக் கொள்வதற்காகவே இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *