மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவில் சீனக் கடற்படைத் தளம் அமைய வாய்ப்பு – அவுஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்

கடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச் செயற்படுத்த சீனக் கடற்படை தயாராகியுள்ளதாக, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அவுஸ்ரேலிய இந்திய நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் பிரூஸ்டர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவார் மைத்திரி – ராஜித சேனாரத்ன

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு வழங்கமாட்டார் என்றும், ஆனால், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளைப் பலப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அலரி மாளிகையில் வைத்து சிறிரங்காவைத் தாக்கினார் ரிசாத் பதியுதீன்

அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் நடந்த இராப்போசன விருந்தின் போது, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தாக்கியதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியும், கூட்டாளிகளும் சிறிலங்கா அரசின் கண்காணிப்பில்

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது முக்கியமான உதவியாளர்களும், கண்காணிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் வங்குரோத்து அடைந்து விட்டார் மகிந்த – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டார் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியான உரையையே நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

விடுதலைப் புலிகளை மறந்து விடக்கூடாது – என்கிறார் மகிந்த

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

புலிகளுக்கு நிதி திரட்டிய 10 பேருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின்  குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சீனாவுக்கு ஆப்புவைக்கும் ரணிலின் திட்டம்

அதிபர் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சந்திரிகா கோரிக்கை

நியாயமான, நீதியான தேர்தல் நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் மகிந்த பரப்புரை – சிறிலங்கா வரலாற்றில் முதல் முறை

சிறிலங்காவின் வரலாற்றில் தேர்தல் பரப்புரைகளுக்கு முதன்முறையாக, முப்பரிமாணத் தோற்றத்தை அளிக்கும், ஹொலோகிராம் தொழில்நுட்பம் (Hologram technology) பயன்படுத்தப்பட்டு வருகிறது.