மேலும்

பிரிவு: செய்திகள்

கூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை

நான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினருக்கு பலாலியில் புதிய நினைவுத் தூபி

சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரை நினைவு கூரும் நிகழ்வு பலாலிப் படைத்தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.

காணாமற்போனோர் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்கிறதாம் அதிபர் ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் மிகமுக்கியமானது- பாகிஸ்தான் நாளிதழ்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாளப் பட்டியைக் காணவில்லையாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் ஜெனிவா கூட்டத்தொடரில் மைத்திரியும் பங்கேற்கிறார்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார்.

கொழும்பு வந்தார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஐந்து நாள் பயணமாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரவேற்றார்.

சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கியாலேயே ரவிராஜ் படுகொலை – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர்,இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கும் – சீன நிறுவனம் நம்பிக்கை

சிறிலங்காவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, அதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர்  சன் சியூ தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற  செயலாளர் தம்மிக திசநாயக்கவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.