எட்கா உடன்பாடு ரணிலை வீட்டுக்கு அனுப்புமா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ
உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர். புரிந்து கொண்டார். இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

