மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தடுத்து நிறுத்தப்பட்ட கோத்தாவின் கைது?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவுக்கு புயல் ஆபத்து – அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் சிறிலங்காவும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் மன்னாரில் காற்றாலை மின் திட்டம்

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை அமைக்கவும், 3400 கி.மீ நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும், ஆசிய அபிவிருத்தி வங்கி, 350 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளது.

மன்னார் ஆயராக லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமனம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகையை, கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – உள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த ஆப்பு?

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் புதிய சாதனை

அடுத்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பதவிநீக்கத்துக்கு எதிரான டெனீஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை, தொடர்ந்து விசாரிக்குமாறு சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று இந்தியா செல்கிறார் ரணில் – மோடியுடனும் பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று பெங்களூர் செல்லும் சிறிலங்கா பிரதமர், உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் 2 நாட்களில் 41 வாள்வெட்டு சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் கணசேகர தெரிவித்துள்ளார்.