மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதில் முந்தியது சிறிலங்கா பொதுஜன முன்னணி

சிறிலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர்களை நினைவுகூர சிறிலங்கா அனுமதிக்க வேண்டும்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

வடக்கு, கிழக்கில் போரில் இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனகபுரம் துயிலுமில்ல புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை மீளமைப்பதற்கான பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச்  செயலகத்துக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கே நாளை தேர்தல் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான, தேர்தல் அறிவிப்பே நாளை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டபடி தேர்தல்?

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடடப்படும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், 133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டவாறு தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வர்த்தமானிக்கு எதிரான வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனு – சட்டமா அதிபர் தாக்கல் செய்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரும், மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய இணங்கியுள்ளார்.

கோத்தாவை கைது செய்ய சிறிலங்கா அதிபரின் அனுமதிக்காக காத்திருக்கும் காவல்துறை

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சிறிலங்கா அதிபர் இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோத்தாவுக்காக பிக்குகள் போராட்டத்தில் குதிப்பர் – எச்சரிக்கிறார் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக கணிசமானளவு பௌத்த பிக்குகள் வீதியில் இறங்குவார்கள் என்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.