இந்தவாரம் அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றம் இந்த வாரம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் இந்த வாரம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தியத்தலாவவில் பேருந்துக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தமக்கு தகவல் தெரிவித்துள்ளார் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
தியத்தலாவவில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அது தொடரும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் இன்று அமைதியான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கு தனக்குள்ள அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இன்று மாலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.