உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு
புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், 25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
