மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவதற்கு என்பிபி அரசாங்கம் பின்னடிப்பு

நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தனிநபர் பிரேரணைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி ஆதரவு வழங்க பின்னடித்து வருகிறது.

சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் முடக்கம்.

சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டு, ஆபாச இணையத்தள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எவ்பிஐயின் தீர்மானத்தை நிராகரிக்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு, சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாக செயற்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) எடுத்தத முடிவை சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு உடன்பாட்டை வெளியிட இந்தியாவின் இணக்கம் தேவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு,  இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் – என்பிபி இரட்டைவேடம்

2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்தி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் வரை, அதனை பயன்படுத்துவதை நிறுத்தி வைப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயலாளர் நாயகமாக மூத்த இந்திய அதிகாரி

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave) அமைப்பின் முதலாவது, செயலாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவரை இந்தியா நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளையானின் மற்றொரு சகாவும் கைது

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீள அச்சிடப்படும் வாக்குச்சீட்டுகள் – 120 மில்லியன் ரூபா மேலதிக செலவு.

வாக்குச்சீட்டுகளை மீள அச்சிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மேலதிகமாகச் செலவாகியுள்ளது என்று அரசாங்க அச்சகர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சியை தடுத்த இந்தியா

திருகோணமலையில் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையே நடத்தப்படவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.