பிள்ளையானின் மற்றொரு சகாவும் கைது
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த 8ஆம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை கைது செய்தனர்.
சிறிலங்கா ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், 90 நாட்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை இரவு, பிள்ளையானின் வாகன ஓட்டுநரான ஜெயந்தன் என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை, மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்தனிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய, காந்த் எனப்படும், தேவா சுகத் என்ற தனியார் பேருந்து ஓட்டுநரே அவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.