மீள அச்சிடப்படும் வாக்குச்சீட்டுகள் – 120 மில்லியன் ரூபா மேலதிக செலவு.
வாக்குச்சீட்டுகளை மீள அச்சிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மேலதிகமாகச் செலவாகியுள்ளது என்று அரசாங்க அச்சகர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்காக, 102 உள்ளூராட்சி சபைகளுக்கான இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சீட்டுகளை மீள அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு அமைய,102 உள்ளூராட்சி சபைகளிற்கான வாக்குச்சீட்டுகள் மீள அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார்.
102 சபைகளின் வாக்குச் சீட்டுக்களை மீள வடிவமைத்து, அச்சிடுவது இலகுவானதல்ல.
வாக்குச்சீட்டுகளை மீள அச்சிடுவதால் மேலதிகமாக 120 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளது என்றும், சிறிலங்கா அரசாங்க அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.