லண்டனில் புலம்பெயர் தமிழருடன் மங்கள முக்கிய சந்திப்பு – சுமந்திரன், சொல்ஹெய்மும் பங்கேற்பு?
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றுடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


