மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்பு

பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது.

மகிந்தவின் பெறாமகன் உதயங்க வீரதுங்க டுபாய் விடுதியில் – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்காவினால் தேடப்பட்டு வரும், ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் தங்கியிருப்பதாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நான்கு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் சிங்கப்பூரில் பேச்சு நடத்தியது சிறிலங்கா குழு

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்தியா, பிரித்தானியா, தாய்லாந்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்

ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை மறுக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர் மீது மௌனப் போர் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா படை அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிபர் ஆணைக்குழுவினால் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது

சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.