மேலும்

தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்

sampanthanசிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

முதல்தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது.

sri lanka indipendence day

இன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் அனைவரும், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை இன்றைய அதிகாரபூர்வ நிகழ்வில் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வின் சமிக்ஞை என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கருத்து “தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்”

  1. Rajan Rangan
    Rajan Rangan says:

    This is not the great event for the Srilankan Tamils but it may be great for the treacherous politician Sampanthar…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *