மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மைத்திரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இம்மாத நடுப்பகுதியில் இந்தியா வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – விரைவில் சீனாவுடன் உடன்பாடு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக,  சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று,  சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண  அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு நிதியளித்த சீன நிறுவனம் மீது வழக்கு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு நிதியளித்ததாக சீன நிறுவனத்தின் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளது.

போர்த்தளபாடங்களை வாங்க ரஸ்யாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் கேட்கிறது சிறிலங்கா

ஆயுதப்படைகளுக்கான போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு, ரஸ்யாவிடம், 400 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்கா கோரியுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சு போர்க்கப்பல் – புதிய உறவுகள் துளிர்க்கின்றன

சிறிலங்காவுடன் உறுதியான கடற்படை கூட்டு ஆரம்பிக்கப்படுவதற்கான தருணம் இதுவேயாகும் என்று, பிரெஞ்சுக் கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கியது சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி

சிறிலங்கா விமானப்படையின் பெல்-206 ரக உலங்கு வானூர்தி ஒன்று ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

மத்தல விமான நிலையத்தைக் கைப்பற்றும் போட்டியில் மூன்று சீன நிறுவனங்கள்

அம்பாந்தோட்டை- மத்தல அனைத்துலக விமான நிலையத்தைக் கைப்பற்றும், போட்டியில் மூன்று சீன நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.

சம்பந்தன் படை முகாமுக்குள் நுழைந்த விவகாரம்- தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதம்

கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்குள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கலையரசனும் கைது

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான கலையரசனும், நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலை மாசுபடுத்தும் நாடுகளில் சிறிலங்காவுக்கு ஐந்தாவது இடம்

உலகில் கடலை மோசமாக மாசுபடுத்தும்  நாடுகளில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. இன்ரநசனல் பிஸ்னஸ் ரைம்ஸ் இதழினால், மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலேயே, சிறிலங்காவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.