மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

தமிழ் அரசியல்வாதிகளைக் கொன்ற முதல்தரக் கொலைகாரன் யார்? – கருணாவிடம் ஆதாரங்கள்

தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

மகிந்தவைக் காப்பாற்ற முனைந்து மாட்டிக் கொண்ட சுசில்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த நிராகரித்துள்ளார்.

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

ஜனநாயகப் போராளிகள் ‘புலிமுகச்சிலந்தி’ சின்னத்தில் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தலைக் குறிவைத்து செயற்படுகிறதாம் இந்தியாவின் ‘ரோ’

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ரோ, பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியப்பட்டியலில் மகிந்த முன்மொழிந்தோருக்கும் இடமில்லை – மைத்திரியின் யோசனையும் நிராகரிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக  கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் 501 வேட்புமனுக்களில் 6,151 வேட்பாளர்கள் போட்டி

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருணாவின் காலைவாரியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளிக்க மறுத்துள்ளது.

இன்றுடன் முடிகிறது வேட்புமனுத் தாக்கல் – மாவட்டச் செயலகங்கள் பரபரப்பு

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.