இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கிறார் சிறிலங்கா பிரதமர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.
ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆளும்கட்சியினர் அச்சம் கொண்டுள்ளனர், அதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் அவரது இரட்டை குடியுரிமை தொடர்பாக பேசுகின்றனர் என, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை ஒழிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியை உருவாக்கும் விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து, இன்று நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் 15ஆம் நாளுக்கு முன்னர் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற முடியாது போனால், இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் நிகழ்வு நாளை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஐதேக முதலில் உள்வீட்டுப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சிறிலங்காவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.