மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ரணிலின் முடிவுக்கு எதிராக 50 எம்.பிக்கள்?

ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்றில் 50இற்கும் மேற்பட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குத்துக்கரணம் அடித்தார் கோத்தா

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணில்- சஜித் இடையே இணக்கம்- விரைவில் கூட்டணி உடன்பாடு

வரும் அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக கோத்தா அறிவிக்கவில்லை

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதுவரை தனது அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களுக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முடிவின்றி முடிந்த பேச்சு – வாக்கெடுப்பு நடத்துமாறு கோரும் சஜித் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியுடன் மகிந்த நேற்றிரவு சந்திப்பு

வரவிருக்கும் அதிபர் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்வது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், நேற்றிரவு முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசநாயக்க மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.

சஜித் – மைத்திரி புதுக்கூட்டணி? : மறுக்கிறது சுதந்திரக் கட்சி

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  புதிய கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.