மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கோத்தாவின் இரட்டைக் குடியுரிமை ஆவணங்கள் இல்லை – கைவிரித்த அரச திணைக்களங்கள்

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் தெரிவித்ததாக, குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு – ஜயம்பதி

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபைக்கான சட்டவரைவை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1999 இல் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு சபையை நிறுவுவதற்கும், புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய பாதுகாப்பு சபை செயலகத்தை அமைப்பதற்குமான, சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு, சிறிலங்கா அதிபர்   சமர்ப்பித்த முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ‘கழுகு’ம் களமிறங்குகிறது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று மற்றும் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது – ஞானசார தேரர்

உயிரிழந்த பிக்குவின் உடலை அடக்கம் செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது என்றும், விகாரைக்கு சொந்தமான நிலத்திலேயே பிக்குவின் உடலை எரிந்ததாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எம்சிசி கொடையை சிறிலங்கா இன்னமும் இழக்கவில்லை – அமெரிக்கா

தமது 480 மில்லியன் டொலர் கொடையை சிறிலங்கா இன்னமும் இழந்து விடவில்லை என்று, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய கூட்டத்திலும் இணக்கப்பாடு இல்லை

அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமாலை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் முக்கியமான கூட்டம் இடம்பெற்றது. எனினும் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித்துக்கு வாய்ப்பளிக்காவிடின் அரசியலுக்கு முழுக்கு – நளின் பண்டார

அதிபர் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால், அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஆசிரியத் தொழிலில் ஈடுபடப் போவதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு எதிராக சஜித் தரப்பு போர்க்கொடி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு ‘கால்கட்டு’ – இன்று வெளியாகிறது மற்றொரு அரசிதழ்

அதிபர் தேர்தல் நடைபெறும் வரை, அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிடவுள்ளது.