சஜித்தை நிறுத்த ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்
சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வரும் 9ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியிருக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, அவரது இணைப் பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி பேச்சுக்கள் தோல்வியடைந்தால், சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியுள்ள ஜனநாயக தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐ.நா அமைதிப்படை விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுக்களில் சாதகமான முறையும் அமையும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை ஆரம்பமானது.
கட்டாருக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவரும், சிறிலங்கா தொழிற்கட்சியின் தலைவருமான ஏஎஸ்பி லியனகேயும் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமது கட்சி எந்த முடிவை எடுத்தாலும், தாம், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கே ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா.