மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

விசாரணைக்குச் சென்ற பசில் ராஜபக்ச கைது

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்குழுவை அனுப்புவது குறித்து உக்ரேனியத் தூதுவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, புதுடெல்லியில் உள்ள உக்ரேனியத் தூதுவர் ஒலெக்சான்டர் செவ்சென்கோ நேற்று கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பசில் ராஜபக்ச, லலித் வீரதுங்கவிடம் விசாரணை தொடங்கியது

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இல்லை என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரியின் பயணம் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணம் நிறைவடையும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீன செனசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த – மைத்திரி சந்தித்துப் பேச இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் நேரடியாகச் சந்தித்துப் பேச இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பினார் பசில் – கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெளியார் நுழையத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பியுள்ளார்.

நாடாளுமன்றம் 27ம் நாள் வரை ஒத்திவைப்பு – மகிந்த ஆதரவாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டமும் வரும் 27ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் மதுபானம் அருந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? – சபையில் குழப்பம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர்.

அழைப்பாணை விடுக்க முன்னர் அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் உத்தரவு

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு, அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு முன்னதாக,  சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று, சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவி்ட்டுள்ளார்.