மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார்.

மைத்திரியை சந்திக்க மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நாளைய சந்திப்பு ரத்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

சிறிலங்கா குறித்த அறிக்கையைப் பார்த்து திகைத்தாராம் ஜோன் கெரி

சிறிலங்காவில் 100 நாள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையைப் பார்த்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி திகைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக ராஜித சேனாரத்ன.

100 நாட்களில் சாதித்தது என்ன? – தொலைக்காட்சி உரையில் சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றிரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது-

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பசில் ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

கோத்தாவிடம் விசாரணை – வெளியே தடையை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சமூகமளித்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவின் பணயகத்துக்கு வருகை தந்தார்.

புதிய முறைமையின் கீழேயே அடுத்த தேர்தல் – அடம்பிடிக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்கும், தேர்தல் முறை மாற்றம் குறித்து புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, புதிய தேர்தல் முறைமையின் கீழேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

கோத்தாவிடம் இன்று விசாரணை – முன்னிலையாகாமல் நழுவ முயற்சி

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

சிறைக்குள் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச – மே 05 வரை விளக்கமறியல்

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.