மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமாக பரவும் சிக்குன்குனியா

சிறிலங்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, சிக்குன்குனியா தொற்று நோய், வேகமாகப் பரவி வருவதாக, முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

நோர்வே ஆய்வுக்கப்பலுக்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுப்பு

நோர்வேயின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான டொக்டர் பிரிட்ஜோப் நான்சன் (RV Dr. Fridtjof Nansen) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, அரசாங்கத்தினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, போலந்து வெளியுறவு அமைச்சர்கள் சிறிலங்கா வருகின்றனர்

இரண்டு உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின் தற்போதைய அரசு ஆட்சியில் இருக்காது

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சியில் இருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் வருகை – இன்று மில்லியனை தொடுகிறது சிறிலங்கா

சிறிலங்கா சுற்றுலாத்துறை இன்று  இந்த ஆண்டின் ஒரு மில்லியனாவது சுற்றுலாப் பயணியை வரவேற்க உள்ளது.கட ந்த ஆண்டில், சிறிலங்கா  ஜூன் மாத இறுதியிலேயே இந்த மைல்கல்லை எட்டியது.

 “சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை“ – கஜேந்திரகுமார்

இனப்படுகொலை  குற்றச்சாட்டை எதிர் கொள்வதற்கு  சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் ஜெர்மனிக்குப் பயணமாகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம்  ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தங்கமுலாம் பூசிய துப்பாக்கி – முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது

தங்கமுலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பயிற்சி பெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் ஒரு வாரகால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்தில் சிறிலங்கா அரசு வெளியிட்ட அரசிதழை உடனடியாக ரத்துச் செய்ய  தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.