மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வடக்கு, கிழக்கில் படைமுகாம்களை அகற்றுவது ஆபத்து என்கிறார் பொன்சேகா

வடக்கு,  கிழக்கில்  இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதன் மூலம் எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையில் சிறப்பு உந்துருளி அணி

சிறிலங்கா காவல்துறை தென் மாகாணத்தில் சிறப்பு உந்துருளி அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவுடன் சிறிலங்கா பேச்சு – வரிக் குறைப்புக் குறித்து தகவல் இல்லை

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது சுற்று வர்த்தகப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் பதவி, அமைச்சரவையில் மாற்றமா? – மறுக்கிறார் லால் காந்த

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று விவசாய அமைச்சர் லால் காந்த  தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைய அனுமதி

வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சீனாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி

இருதரப்பு ஒத்துழைப்பு மூலம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் இந்த வாரம் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளன.

வேட்பாளர்களுக்கு காலக்கெடு முடிந்தது- நள்ளிரவு வரை காத்திருந்த அதிகாரிகள்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பரப்புரை வருமானங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய  அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

குருநாகல் சிறுவன் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு

உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு ( monkey tapeworm) சிறிலங்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுரங்க துலமுன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் என்பிபிக்கு ஆதரவு தேட பணம் கொடுக்கும் வணிகர்கள்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு, சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, வணிகர்கள் மூலம் நிதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்களை ‘தமிழ் ராஜபக்சக்கள்’ என்கிறார் பிமல் ரத்நாயக்க

பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ராஜபக்சக்களாக மாறியுள்ளனர் என்று  சிறிலங்காவின் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.