ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி
தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.
தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக, விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறைகள் அனைத்தும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப்பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.
மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே நடத்தப்படும் என்றும், அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.
ஐ. நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைத்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கத் தவறினால், அதற்கு தாம் ஒத்துழைக்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.