மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைக்கத் தயார் – சரத் பொன்சேகா

மகிந்த ராஜபக்சவும் அவரது உதவியாளர்களும் மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடிய அச்சுறுத்தல் எழுந்தால், அவரைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைக்கத் தயார் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

முக்கிய தலைவர்கள் மெதமுலானவுக்கு வரவில்லை – மகிந்தவுக்கு ஏமாற்றம்

மெதமுலானவில் இன்று நடத்திய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதமை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் – அறிவித்தார் மகிந்த

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த வீட்டுக்குப் படையெடுத்துள்ள 60 வாகனங்கள் – முடிவை சற்று நேரத்தில் அறிவிக்கிறார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கும் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

மகிந்தவின் முடிவு இன்று – மைத்திரியின் அறிக்கையால் குழப்பம்

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது முடிவை இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கவுள்ளார்.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக மைத்திரி ஏற்கவில்லை – அதிபர் செயலகம் அறிக்கை

மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகரிக்கவோ அல்லது, பிரதமர் வேட்பாளராகப் பெயரிடவோ இல்லை என்று சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள மனிதாபிமான விவகாரப் பணியகத்தை மூடுகிறது ஐ.நா

சிறிலங்காவில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம், இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளது.

‘மகிந்தவை வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல்’

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கில் நேவி சமந்தவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கா கடற்படை கப்டன் சமந்த முனசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

கட்டுப்பணம் கையேற்கிறது சிறிலங்கா தேர்தல் திணைக்களம்

சிறிலங்காவில் எதிர்வரும்  ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.