மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவுக்கு இடமளித்ததால் வெளியேறினார் சம்பிக்க – உள்ளே வந்தார் தினேஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மகிந்தவுக்கு இடமளிக்கப்பட்டது சந்திரிகாவுக்குத் தெரியாதாம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 புரட்சி தடம் புரள இடமளியேன் – என்கிறார் மைத்திரி

ஜனவரி 8ஆம் நாள் நடந்த அமைதிப் புரட்சி தடம் புரள்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

33 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்களை சந்தித்தார் மைத்திரி

வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ள இராஜதந்திரிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவின் அடுத்த நகர்வு – ஓரிரு மணிநேரத்தில் அறிவிப்பு வெளியாகிறது

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, மகிந்த ராஜபக்ச தரப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் – கைவிரித்தது பொது பல சேனா

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று, சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.

ஐதேகவுடன் இணைந்து போட்டியிடுகிறது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக, கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியில் போட்டியிட மகிந்த விண்ணப்பிக்கவில்லை – ராஜித சேனாரத்ன

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம், மகிந்த ராஜபக்ச இன்னமும் அதிகாரபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்தவை நிறுத்துவதற்கு சுதந்திரக் கட்சி முடிவெடுக்கவில்லை- சந்திரிகா

தாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தாலும், அவருக்கு போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.