மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பதவியை விட்டு விலகிய இரு பிரதியமைச்சர்களும் மைத்திரிக்கு ஆதரவு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வகித்து வந்த பிரதியமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.திகாம்பரம், வே.இராதாகிருஸ்ணன் ஆகிய இவரும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனும் பதவி விலகினார்

மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த – பிரதியமைச்சர் வேல்சாமி இராதாகிருஸ்ணன் இன்று பிற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிரதியமைச்சர் பதவியை துறந்தார் திகாம்பரம் – எதிரணியுடன் இணைகிறார்

அண்மையில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட ப.திகாம்பரம் இன்று காலை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்

சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் ஒருவாரகாலம் தங்கிச் சென்ற பின்னர், முதல்முறையாக இந்தியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமைச்சர் வாசு – மைத்திரியை ஆதரிப்பார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

“மகிந்தவுக்கு பிடித்துள்ளது பண்டா போபியா” – சந்திரிகா கிண்டல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது பண்டாரநாயக்க போபியா (பயம்) வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துகிறார் மைத்திரிபால

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனது சொத்துகள் பற்றிய விபரங்களை எவரேனும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அரசுப் பக்கம் தாவவில்லை – சந்திராணி பண்டார மறுப்பு

திஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஆளும்கட்சிக்குத் தாவியதாக வெளியான செய்திகளை, ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, மறுத்துள்ளார்.

ஐதேகவின் புதிய பொதுச்செயலர் கபீர் காசிம்

ஐதேகவின்  புதிய பொதுச்செயலராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐதேகவின் பொதுச்செயலாக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசதரப்புக்குத் தாவியதையடுத்தே, இந்த நியமனம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.