மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சோமரத்ன ராஜபக்சவை விசாரிப்பது சிக்கலை ஏற்படுத்துமாம்

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில்,  அது குறித்து விசாரணை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என,  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

சோமரத்னவின் கடிதம்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செம்மணிப் புதைகுழிகள் பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராவுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபரும், சர்வதேச சமூகமும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க முன்வந்தார் சோமரத்ன ராஜபக்ச

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, மரணதண்டனைக் கைதியான சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அடுத்த இரண்டு வாரங்களில் அதன் பணிகளை முடிக்கும் என  குழுவின்  தலைவர் ரியன்சி அரசகுலரத்ன,தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஓராண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிகோவின் பதவிக்காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறந்த தீவுகளின் பட்டியல் – முதலிடத்தில் சிறிலங்கா

உலகின் 50 மிகச் சிறந்த தீவுகளின் பட்டியலில் சிறிலங்கா இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

அனுரவுடன் மாலைதீவு சென்ற நாமலுக்கு நீதிமன்றம் பிடியாணை

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவைக் கைது செய்ய அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

50 உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை

தேர்தல் நடந்து மூன்று மாதங்களாகப் போகின்ற நிலையிலும், 50 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

49 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றார் பிரீதி பத்மன் சூரசேன

சிறிலங்காவின் 49வது  பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன, அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்றுப் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்கா- சிறிலங்கா இடையே அடுத்த வாரம் மீண்டும் பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அடுத்தவாரம் மற்றொரு சுற்றுப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.