மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அமெரிக்கா- சிறிலங்கா இடையே அடுத்த வாரம் மீண்டும் பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அடுத்தவாரம் மற்றொரு சுற்றுப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுழைவிசைவின்றி சிறிலங்கா வரக் கூடிய 40 நாடுகள் அறிவிப்பு

40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

1983ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை படுகொலைகளின் 42வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொழும்பு பொரளை சந்தியில் நடைபெற்றது.

சஹ்ரான் பற்றிய தகவல்களை புறக்கணித்தவர் அருண ஜயசேகர

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண  ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட தகவல்களைப் புறக்கணித்தார் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதம நீதியரசர் -அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சுரசேனவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

ரணிலின் அவசரகால பிரகடனம் சட்டவிரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022ஆம் ஆண்டு பதில் அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்க,  அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதன் மூலம் அவர் அடிப்படை  உரிமைகளை மீறியிருப்பதாகவும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

ஒரேகுற்றம் இரண்டு வழக்குகள்- சிக்கிய முன்னாள் இராணுவ அதிகாரி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டில்,  சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நிலந்த ஜயவர்த்தனவை நீக்கியது தவறு – தயாசிறி போர்க்கொடி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  வலியுறுத்தியுள்ளார்.