அமெரிக்கா- சிறிலங்கா இடையே அடுத்த வாரம் மீண்டும் பேச்சு
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அடுத்தவாரம் மற்றொரு சுற்றுப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வர்த்தக வரிகளைக் குறைப்பது தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி இடையே மெய்நிகர் முறையில் இந்தப் பேச்சுக்கள் நடைபெறும்.
ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னர் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படும் என்று சிறிலங்கா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.