மேலும்

2031 இற்குள் சிறிலங்கா முப்படைகள் மறுசீரமைப்பு- பாதுகாப்பு மீளாய்வுக் குழு உருவாக்கப்படும்

சிறிலங்கா இராணுவம், கடற்படை மற்றும்  விமானப்படை ஆகிய முப்படைகளும் 2031-ஆம் ஆண்டிற்குள் மறுசீரமைக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் முப்படைகளும் நவீன போர்முறைகளைக் கையாளக்கூடிய தொழில்முறைப் படைகளாக மாற்றப்படும்.

ஆளில்லா வான்வழி வாகனங்களை (ட்ரோன்கள்) எதிர்கொள்ளும் ஐந்து அமைப்புகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற படைத் தளபதிகளை உள்ளடக்கிய ‘பாதுகாப்பு மீளாய்வுக் குழு’ (Defence Review Committee) ஒன்று அமைக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

முன்னதாக விவாதத்தில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நவீன போர் உத்திகளைக் கருத்தில் கொண்டு, தற்போது மனித ஆற்றலை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் சிறிலங்காவின் முப்படைகளை, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட படைகளாக மாற்ற வேண்டியது அவசியம் என   வலியுறுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *