மேலும்

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் மொன்டானா ஆளுநர் சந்திப்பு

அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான்ஃபோர்டே (Greg Gianforte) சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் பணியகத்தில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த இரு தரப்பு சந்திப்புகளின்போது, ​​பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஆகிய துறைகளில் சிறிலங்காவுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிக்கு சிறிலங்காவின் பாதுகாப்புபிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேவேளை மொன்டானா ஆளுநர் கியான்போர்டே, சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *