மேலும்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை- வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றம் கூடிய பின்னர், சபாநாயகரின் அறிவிப்புகளின் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதெனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஓகஸ்ட் 20ஆம் நாள் சிறப்புரிமை குறித்த ஒரு கேள்வியை எழுப்பினேன், ஆயினும் இன்றுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், சபாநாயகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக் கருதப்படுகிறார்; அவருக்கு எந்தவொரு சிறப்பு விலக்குரிமையும் இல்லை.

அதிபருக்கு மட்டுமே அத்தகைய விலக்குரிமை உள்ளது. எனவே, வரும் வெள்ளிக்கிழமை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாங்கள் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளோம்.

அந்தத் தீர்மானத்தில் கூடுதல் விடயங்களையும் நாங்கள் இணைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் முன்மொழியும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *